தஞ்சாவூர் மாநகர, மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியக்கிரஹாரம் பகுதியில் கடந்த
10.04.2025-ம் தேதி ஆசிரியர் வளர்மதி பாலசுப்ரமணியன் என்பவர் வீட்டில் இருந்த 58 பவுன் நகை திருட்டு சம்பவம் நடைபெற்றது.

இது தொடர்பாக தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலையத்தில் இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின்படி, தஞ்சாவூர் நகர உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர். சோமசுந்தரம் மேர்பார்வையில், காவல் ஆய்வாளர் ம.கலைவாணி, உதவி ஆய்வாளர் தென்னரசு. தேசியன் ஆகியோர் தலைமையில், தலைமை காவலர்கள் கோதண்டபானி, திருக்குமரன், முதன்நிலை காவலர்-அருள்மொழிவர்மன், இரண்டாம்நிலை காவலர்கள் சைது மீர் இஸ்மாயில், விஜயசந்திரன், விக்னேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தஞ்சாவூர் திட்டை அக்ரஹாரம் பகுதியில் சரவணன் மகன் சுதாகர் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவரிடமிருந்து களவு போன அனைத்து நகைகளையும் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் 8- நாட்களில் விரைவாக செயல்பட்டு குற்றவாளி கைது செய்த அனைத்து காவலர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார் தஞ்சாவூர் நகர உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் சோமசுந்தரம்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *