தேனி நாடார் சரஸ்வதி தமிழ் கல்வியியல் கல்லூரியின் 20ஆவது ஆண்டு விழா தேனி மாவட்டம் தேனி மேலப் பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் 20-வது ஆண்டு விழா தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் தலைவருமான கல்வித்தந்தை டி ராஜ மோகன் தலைமை தாங்கினார் அனைத்து நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் உப தலைவர் பி பி கணேஷ் பொதுச் செயலாளர் எம் எம் ஆனந்தவேல் பொருளாளர் எம் பழனியப்பன் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்
நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியின் செயலாளர் ஏ. குணசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார் நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜெ.பியூலாராஜினி 2024.2025 கல்வியாண்டின் கல்லூரியின் சிறப்புகள் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை ஆண்டறிக்கையாக சமர்ப்பித்தார். கல்லூரியின் பொருளறிவியல் துறை உதவிப் பேராசிரியர் எம். ஜீவிதா ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர்களை அறிமுகம் செய்தார்
ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை விஜயலட்சுமி வீரமணி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார் 2023 2024 ஆம் கல்வியாண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்த பொருளியியல் துறை மாணவி எஸ் சுவாதி இரண்டாம் இடம் பெற்ற வணிகவியல் துறை மாணவி கே ஸ்ரீநிதி மூன்றாம் இடம் பெற்ற ஆங்கிலத்துறை ஆசிரிய மாணவி ஏ.சுவேதா ஆகிய மாணவர்களுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பெரியோர்கள் கேடயங்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.
2022 2024 கல்வி ஆண்டின் பெஸ்ட் அவுட் ஹோயிங் இரண்டாம் ஆண்டு மாணவியாக ஜி. ராஜேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பெரியோர்கள் பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கி வாழ்த்தி பாராட்டினர்.
நுண் கலைகள் பைன் ஆர்ட்ஸ் மற்றும் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பி.எட் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.மிஸ் பைன் ஆர்ட்ஸ் வெற்றியாளர்கள் இரண்டாம் ஆண்டு மனைவி கே.அகஷயா இண்டிவைடியல் ஷாம்பியன் சிப் வெற்றியாளர் சி.எஸ்.ஜனணி ஆகிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய அங்கமாக மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சி வெகு சிறப்பாகவும் அனைவரையும் கவரும் விதமாக நடைபெற்றது கல்லூரியின் உதவி பேராசிரியர் பி ராஜேஸ்வரி நன்றி கூறினார்.