பாபநாசம் செய்தியாளர்
ஆர் தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் வஃக்பு வரியா திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அனைத்து கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி ஜமாத் தலைவர் அக்பர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அமல்படுத்தி உள்ள வக்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி வலியுறுத்தியும் ஒரு வாரத்தில் திரும்ப பெறவில்லை என்றால் இந்தியா முழுவதும் போராட்டம். நடைபெறும் என்றும் கையில் கருப்பு கொடியுடன் கருப்பு சட்டை அணிந்து கண்டன முழக்கமெட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முகமது ஆரிப் ,முகமது இலியாஸ் அன்வர் பாட்சாஅனைத்துக் கட்சி நிர்வாகிகள் துளசிஅய்யா, இப்ராஹிம் நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்