மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் 22 ஆவது புத்தகத் திருவிழா துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தகத் திருவிழாவை முன்னாள் காவல்துறை ஐ.ஜி முனைவர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
ஆயிரக்கணக்கான தலைப்புகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பள்ளியின் செயலர் சிந்தனை கவிஞர் முனைவர் கவிதாசன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் சிறப்பு விருந்தினர் முனைவர் ஐ.ஜி.முத்துசாமி பார்வையிட்டார். அப்பொழுது மாணவர்களிடம் பேசிய அவர் தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களை நடத்த முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் வருங்கால இந்தியாவை வடிவமைக்கும் சிற்பியாக உள்ள மாணவர்கள் புத்தக வாசிப்பை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி செயலர் முனைவர் கவிதாசன், பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, கல்வி ஆலோசகர் கணேசன். துணை முதல்வர் சக்திவேல் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் .