போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்ட்ர்ஸ் அசோசியேசன் காலேஜ் கல்லூரி நாள் விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முந்தல் சாலையில் அமைந்துள்ள ஏல விவசாயிகள் சங்கம் மற்றும் கார்டமம் பிளாஸ்டர்ஸ் அசோசியேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 51 வது கல்லூரி நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் இந்த விழாவிற்கு கல்லூரி செயலாளர் ஆர். புருஷோத்தமன் அனைவரையும் வரவேற்றார்
கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் கல்லூரியில் 2024 2025 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகள் பற்றியும் பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்களின் ஆய்வுகள் குறித்தும் மாணவர்களின் தனித்திறமைகள் குறித்தும் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார்
கல்லூரி அளவில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் சிறப்பு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கியவர்களை நினைவு கூர்ந்தார் கல்லூரியின் தலைவர் எஸ் வி சுப்பிரமணியன் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் முனைவர் சொரூபம் முனைவர் சிவப்பிரகாசம் ஏல விவசாயிகள் சங்க நிர்வாகத்தினர்கள் மகேஸ்வரன் நித்தியானந்தம் செல்வகுமார் ஓய்வு பெற்ற ஆங்கிலத்துறை பேராசிரியர் அழகர்சாமி உள்ளிட்ட கல்லூரியின் இருபால் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கலூரியின் கணினித் துறைத்தலைவர் முனைவர் ஆர் முருகேசன் நன்றி கூறினார் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜா தலைமையில் பேராசிரியர்கள் முப்படை கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்