முதல்வர் ரங்கசாமி இல்லம் அருகே வன்னியர் சங்க மாநாட்டையொட்டி 50 அடி நீள சுவர் விளம்பரம் – பரபரப்பு
வன்னியர் சங்க மாநாடு மே மாதம் 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது இந்த மாநாட்டில் மருத்துவர் அய்யா ராமதாஸ், சின்ன அய்யா அன்புமணி ராமதாஸ்,
கலந்து கொள்கிறார்கள்.
அதனை முன்னிட்டு மே 11 மாமல்லபுரம் மாநாட்டிற்கு அய்யா சின்னய்யா அழைக்கிறார் என்ற வாசகங்களுடன் சுவர் விளம்பரம் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் சுவர் விளம்பரம் மற்றும் பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் புதுச்சேரி திலாஸ்பேட்டை, வீமன் நகர் ரங்கசாமி தெருவில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் பழைய வீட்டின் அருகே சுமார் 50 அடி நீளம் அளவிற்கு சுவர் விளம்பரம் பிரம்மாண்டமாக எழுதப்பட்டுள்ளது.
இந்தப் பணியினை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை அமைப்பாளர் வடிவேல்
கவுண்டர் மற்றும் நிர்வாகிகள், பாண்டித்துரை, பாண்டுரங்கன் மற்றும் சரவணன்
உள்பட பல்வேறு நிர்வாகிகள் நேரில் வந்து பார்வையிட்டனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களின் பழைய வீட்டின் அருகே
வைக்கப்பட்டுள்ள இந்த சுவர் விளம்பரத்தினை அந்த வழியாக செல்வோர் வருவோர் மற்றும் முதல்வர் ரங்கசாமியின் இல்லத்திற்கு வருவோர் செல்வோர் அனைவரும் இந்த சுவர் விளம்பரத்தை உற்று நோக்கி பார்த்து வியந்து செல்கிறார்கள்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.