காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலுக்கு பூதபுரி ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு.
இத்திருக்கோயிலில் வருடா வருடம் சித்திரை மாத பிரமோற்சவ விழா ஸ்ரீ ஆதி கேசவ பெருமாளுக்கு பத்து நாட்களும் ஸ்ரீ ராமானுஜருக்கு அவதார உற்சவம் என 10 நாட்களும் என வெகு விமர்சியாக உற்சவங்கள் நடைபெறும்.
அந்த வகையில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாளின் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மோகினி அவதாரம் தங்க பல்லக்கு, யாளி வாகனம், புஷ்ப பல்லக்கு, யானை வாகனம் ஆகியவற்றில் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருலிளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனை தொடர்ந்து ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
வழி நெடுகிலும் நீர் மோர் குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது இத்திருத்தேரானது தேரடி வீதியில் துவங்கி காந்தி சாலை , திருவள்ளூர் சாலை சின்னக்கடை வீதி வழியாக சென்று நிலையை வந்தடையும்