எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே திட்டை ஊராட்சியில் 20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு அம்மா பூங்கா விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் பழுது விரைந்து சீரமைக்க கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ஊராட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது.
சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.காலை மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், விடுமுறை நாட்களில் சீர்காழி நகர் மற்றும் திட்டை ஊராட்சி மக்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக விளங்கிய அம்மா பூங்கா தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடக்கிறது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும் உடற்பயிற்சி கூடத்தில் அமைக்கப்பட்ட உபகரணங்கள் பழுதடைந்து இரும்பு கூடுகளாக சிதைந்து கிடைக்கிறது.
தற்போது கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த அம்மா பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களை புதுப்பித்து பூங்கா வளாகத்தில் மண்டியுள்ள புதர்களை அகற்றி சீரமைக்க அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.