புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெருச்சிவன்னியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐம்பெரும் விழா வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் நிலை இரண்டு இர்ஷாத் அகமது, வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் பாரதிதாசன் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் சின்ன ராஜா அனைவரையும் வரவேற்றார்… இடைநிலை ஆசிரியர் ரமா பிரபா ஆண்டறிக்கையை வாசித்தார்….
இவ்விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் பேசும்பொழுது இப்பள்ளிக்கு கலையரங்கத்தை அமைத்துக் கொடுத்த கிராம பொதுமக்களையும், உயர் மட்ட பெயர் பலகையை அமைத்துக் கொடுத்த ராஜலட்சுமி முருகேசன் அவர்களையும் , ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் செல்வங்களை பாராட்டியும் , வாழ்த்தி பேசினார்.
இவ்விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சரண்யா, துணைத் தலைவர் கற்பகவள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் வில்லியம், ஆசிரியர் அப்துல் ஹமீது
ஊர் பெரியவர்கள் பழனிவேல், ராஜமாணிக்கம், வைரக்கண்ணன், சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்வி, துரைராஜ் முருகையன், செல்வராஜ், ரெங்கராஜ், சாமிநாதன், முருகேசன், மணிகண்டன், அகிலாண்டேஸ்வரி, மற்றும் பெற்றோர்கள் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
பின்னர் மாணவர்களுடைய தனித்திறன் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது அனைவரும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டினை பெற்றனர்.
நீதியை நிலை நாட்டிய சிலம்பு என்னும் நாடகமும்.கைபேசி வரமா! சாபமா! என்ற பட்டிமன்றமும் மாணவச் செல்வங்களால் மேடையில் அரங்கேற்றப்பட்டது.
நிறைவாக ஆசிரியர் ரமா பிரபா நன்றி கூறினார்.