கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை கண்டித்து கரூர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று தலைமை தபால் நிலையம் முன்பு பாஜக அரசை கண்டித்து ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை கண்டித்தும் கரூர் மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டது மேலும் ராகுல் காந்தி மீது போடப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரத் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு முன்னிலை வகித்தார். உடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோகுலே, மாநகர துணை தலைவர் கண்ணப்பன், கடவூர் விஜயன், அரவக்குறிச்சி நகராட்சி உறுப்பினர் பஜிலா பானு, தாந்தோணி குமார், புகலூர் கமல், ராஜேந்திரன், குளித்தலை சீதா, ஆறுமுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.