சத்தியமங்கலம் ரோட்டரி சத்தி டைகர்ஸ் மற்றும் ஶ்ரீ வெற்றி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கண்காட்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது விழாவிற்கு ரோட்டரி சத்தி டைகர்ஸ் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
நகர மன்ற தலைவர் ஜானகி ராமசாமி , காமதேனு கல்லூரி நிறுவனர் பெருமாள்சாமி, ஈரோடு சட்ட கல்லூரி துணை தலைவர் . காயத்ரி ரவிச்சந்திரன் ஸ்ரீ வெற்றி கல்லூரி நிர்வாக இயக்குனர் க. செ.ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் தாமு எதிர்காலம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் ஆசிரியை , மாணவ,மாணவிகள், பெற்றோர்கள்,ரோட்டரி உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்