புதுச்சேரி:-
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பதற்கு சொந்தமான படகில் காரைக்கால் மற்றும் தமிழக பகுதி 13 மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் காரைக்கால் மீனவர்களை கைது செய்ததுடன் மீனவர்கள் மீது துப்பாக்கி சுடு நடத்தினர்.இதில் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியை சேர்ந்த செந்தமிழ் மீனவர் படுகாயம் அடைந்தார்.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவர் செந்தமிழை இந்தியா கொண்டு வருவதற்கு பாரத பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை செயலர், புதுச்சேரி துணை நிலைய ஆளுநர், புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எடுத்த முயற்சியின் பேரில் கடந்த மாதம் காயமடைந்த செந்தமிழை சென்னை கொண்டு வந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் புதுச்சேரி அரசின் கண்காணிப்பின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து ஓரிரு வாரங்களுக்கு முன்பு காரைக்காலுக்கு மீனவர் செந்தமிழ் அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் மீனவர் செந்தமிழை கிளிஞ்சல் மேட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மாண்புமிகு புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் திரு.கைலாசநாதன் அவர்கள் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்கள்.மேலும் துப்பாக்கி சூட்டின் போது நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் இலங்கையில் மருத்துவமனையில் தரப்பட்ட சிகிச்சைகள் குறித்து மீனவர் செந்தமிழிடம் ஆளுநர் கைலாசநாதர் அவர்கள் முழுமையாக கேட்டறிந்தார்கள்.
ஆளுநர் கைலாசநாதன் அவர்கள் மீனவர் செந்தமிழுக்கு தரப்படும் சிகிச்சைகள் மற்றும் எக்ஸ்ரே ஆவணங்களை ஆய்வு செய்து மருத்துவ சிகிச்சைகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து விரிவாக மீனவர் செந்தமிழுடன் கலந்துரையாடிய துணைநிலை ஆளுநர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும், மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை தொடர்ச்சியாக பின்பற்றி உடல்நலம் தேர வேண்டுமென மீனவர் செந்தமிழுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்கள்.
தொடர்ந்து ஆளுநரிடம் பேசிய மீனவ பஞ்சாயத்தார்கள் இலங்கை கடற்படையாள் கைது செய்யப்பட்ட நிலையில் விரைவாக விடுதலை செய்தமைக்கும் காயமடைந்த மீனவரை மீட்டு உயர்தர சிகிச்சை அளித்தமைக்கும் ஆளுநர் கைலாசநாதனிடம் மீனவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த ஆய்வின்போது துணைநிலை ஆளுநரின் செயலரும் புதுச்சேரி மீன்வளத்துறை செயலாளர் மணிகண்டன் இ.ஆ.ப அவர்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ் இ.ஆ.ப, காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குனர் கோவிந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.