செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1956-ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான முனைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தான் படித்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் சுகாதரத்தை மேம்படுத்தவும், பள்ளியில் புதியதாக தொடங்கியுள்ள விவசாய பிரிவு பயிலும் மாணவர்கள் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு அமைத்து கொடுத்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் முன்னாள் மாணவராக தான் படித்த பள்ளியில் செயல்படுத்தியுள்ளார்.நம் பள்ளி நம் பெருமை அரசு பள்ளியின் முன்னாள் மாணவர் எங்கள் அடையாளம் என சிறப்புரையாற்றினார்.இப்பள்ளியில் 1984 மற்றும் 1995ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பாக நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையத்தை தொடங்கிவைத்தார்.

தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக முன்னாள் மாணவர்களால் அமைத்து தரப்பட்ட நான் முதல்வன் உயர்கல்வி பயிற்சி மையமாகும்.பயிற்சி மையத்தில் பள்ளியில் படித்து பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் மாணவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .இது பயிற்சி மையத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஒரு உத்வேகமாக அமையும்.

இந்நிகழ்ச்சிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கற்பகம் அவர்கள் தலைமை வகித்தார். மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி அங்கயற்கண்ணி அவர்கள் முன்னிலை வகித்தார்.பள்ளியின் தலைமையாசிரியர் திரு விஜயகுமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.சுற்றுசூழல் விஞ்ஞானி முனைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் திட்டத்தை துவக்கி வைத்தார்.முதன்மைகல்வி அலுவலரின் (மேல்நிலை )நேர்முக உதவியாளர் திரு உதயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.



சிறப்பு அழைப்பாளராக ரவுண்ட் டேபிள் இந்தியா MSRT 169 LMF Tr.வருண் கலந்து கொண்டார் .பேரூராட்சியின் துணை தலைவர் வி டி ஆர் வி எழிலரசன் பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி வடிவுக்கரசி சிவகுமார் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு சித்தார்த்தர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.பள்ளியில் இத்திட்டங்களை செயல்படுத்த உறுதுணையாக இருந்த பள்ளியின் முன்னாள் மாணவர் மற்றும் ஆசிரியர் திரு தணிகைவேல் நன்றியுரையாற்றினார்.