காஞ்சிபுரம்
காஞ்சி மாநகரில் பிள்ளையார்பாளையம் பகுதியில்,ஜூட் குண்டு புரூஸ்லீ அசோசியேசன் ஆப் இந்தியா பொதுச் செயலாளர் கிராண்ட் மாஸ்டர் புரூஸ் லீ ராஜ் அவர்களின், ஜூட் குண்டோ அசோசியேஷன் தமிழ்நாடு அலுவலகம் மற்றும் பயிற்சி மையம் திறப்பு விழா, ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி மிக விமர்சையாக நடைபெற்றது.

தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சி மாநகரில் உதயமாகி இந்த பயிற்சி மையத்தில்,
ஜூட் குண்டு புரூஸ்லீ அசோசியேசன் ஆப் இந்தியா பொதுச் செயலாளர் கிராண்ட் மாஸ்டர் புரூஸ் லீ ராஜ் அவர்கள் தற்காப்பு கலையினை மிக எளிமையான முறையில் அனைவரும் எளிதில் பயிலும் வகையில் பயிற்சி அளிக்கிறார்.
ஜூட் குண்டுடோ புரூஸ்லீ அசோசியேசன் ஆப் இந்தியாவின் இணை செயலாளரும், ஜூட் குண்டோ மாநில செயலாளருமான காஞ்சி எஸ்.கண்ணன் முன்னிலையில்,
புரூஸ்லீயின் மாணவர், கிராண்ட் மாஸ்டர் புரூஸ்லி ராஜ் தலைமையில் நடைபெற்ற பயிற்சி மையம் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் வாசுதேவன், எஸ். அருன்பாண்டியன் ஆடல் அரசு, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்
செந்தில்குமார், டாக்டர். வெங்கடேசன், வாய்சன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் மதன்குமார், ஏழுமலை, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட இணை செயலாளர் சிவ. புருஷோத்தமன், பஷீர், மணிகண்டன், சரவணன், கார்த்திக், ராஜி மல்லர், செந்தில் கன்சல்டன்ட் ஞானசேகரன் மற்றும் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
தமிழகத்தின் முதல் முறையாக புரூஸ்லீயின் மாணவர், கிராண்ட் மாஸ்டர்
புரூஸ்லி ராஜ் தலைமையில்,ஜூட் குண்டு புரூஸ்லீ அசோசியேசன் ஆப் இந்தியா
அகடமியானது, இந்த பயிற்சி மையத்தினை ஜூட் குண்டோ அசோசியேசன் ஆப் தமிழ்நாட்டின் தலைமையகமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சி மையத்தில் இன்டர்நேஷனல் முறையில் தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்படுகிறது.