பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
பெரம்பலூர் விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தினசரி 750 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் எள் மற்றும் மணிலா உள்ளிட்ட விளைபொருட்களை டிஜிட்டல் முறையில் எடை மற்றும் ஏலமூலம் விற்பனை செய்து வருகின்றனர். தேசிய மின்னணு வேளாண் சந்தை (eNAM) வாயிலாக, நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் நேரடியாக அல்லது முகவர் மூலமாக போட்டியிட்டு விலை நிர்ணயிக்கின்றனர்.
விலை ஏற்கத்தக்கதாக இல்லாவிட்டால், விவசாயிகள் தங்களின் பொருட்களை வாபஸ் பெறும் வசதியும், அடுத்த நாளில் மீண்டும் விற்பனை செய்யும் வசதியும் உள்ளது. இதனால், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு லாபம் பெறுகின்றனர்.
விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை சிரமமின்றி விற்பனை செய்ய, அருகிலுள்ள ஆண்டிமடம், அரியலூர், மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட விற்பனைக் கூடங்களிலும் ஜெயங்கொண்டம் கூடத்தின் போன்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, விவசாயிகள் கீழ்காணும் எண்ணுகளின் மூலம் தொடர்பு கொள்ளலாம்:
அரியலூர் விற்பனைக்கூட கண்காணிப்பாளர்: 7373877047
பெரம்பலூர்/பூலம்பாடி மேற்பார்வையாளர்: 9790198566
ஆண்டிமடம் மேற்பார்வையாளர்: 9842852150
மேலணிகுழி மேற்பார்வையாளர்: 8760328467
ஜெயங்கொண்டம் கண்காணிப்பாளர்: 6381388125
இத்தகவலை பெரம்பலூர் விற்பனைக் குழு செயலாளர் திரு சந்திரமோகன் வெளியிட்டுள்ளார்.