கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுதந்திர போரட்ட விரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழகம் கிழக்கு ஒன்றியம் சார்பாக சுதந்திர போரட்ட விரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குடந்தை மாநகர செயலாளர் விஜயகுமார்,திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவா,மாவட்ட மகளிரணி அமைப்பாளர், அஞ்சனா, மாவட்ட
இளைஞரணி அமைப்பாளர் செந்தில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினித் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மகளிர் அணியிணர் என ஏராளமானோர் கலந்துகொண்டு தீரன் சின்னமலையின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.