தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் 20 வரை நீத்தார் நினைவு நாளாகவும்,
தீ தொண்டு நாள் வார விழாவாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்து இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் பல்வேறு இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீ விபத்து ஏற்படாத வண்ணம் விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டம் அரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில் நாச்சினம்பட்டியில்இயங்கி வரும் ரதி காட்டன் கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை தீ பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.
இந்த தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சியை மாவட்ட அலுவலர் ப.அம்பிகா, அரூர் நிலையை அலுவலர் காமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு ஒத்திகை செய்து காண்பித்தனர். தீ விபத்து ஏற்படாத வண்ணம் எவ்வாறு செயல்படுவது,தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது, எவ்வாறு தீயை அணைப்பது, போன்ற செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தீ தடுப்பு குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு தொண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.