கோவையில் ‘பசுமை விழா’ வேளாண்மை மற்றும் பசுமை வாழ்க்கை முறையை கொண்டாடும் இரண்டு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் துவக்கம்

பெடரல் வங்கி ‘பசுமை விழா எக்ஸ்போ’ மற்றும் ரேடியோ சிட்டி இணைந்து நடத்தும், வேளாண்மை மற்றும் பசுமை வாழ்க்கை முறையை கொண்டாடும் இரண்டு நாள் கண்காட்சி துவங்கப்பட்டது.

இந்நிகழ்வை கோவை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கணபதி ராஜ்குமார், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் துறை டீன் டாக்டர் வெங்கடேஷ் பழனிச்சாமி, மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் தெய்வசிகாமணி ஆகியோர் இனிதே தொடங்கி வைத்தனர்.

“விவசாயத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் நடந்த சிறப்பு கருத்தரங்கில், விவசாயிகள், வேளாண்மை நிபுணர்கள் மற்றும் துறை சார்ந்த சிந்தனையாளர்கள் கலந்துகொண்டு பயனுள்ள கருத்துப்பகிர்வில் ஈடுபட்டனர்.

சிறந்த விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் , பசுமை விருதுகள் வழங்கப்பட்டன.

75-க்கும் மேற்பட்ட கண்காட்சி ஸ்டால்கள் மூலமாக, இயற்கை உணவுப் பொருட்கள், மின்சார வாகனங்கள், பசுமை வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகளில், பாரம்பரிய நடனம், நாட்டுப்புற இசை, பறை இசை, மற்றும் மாயாஜாலக் கலை நிகழ்ச்சி இடம்பெற உள்ளன.

பரிசுகளும் கண்காட்சியின் சிறப்பான அம்சமாக உள்ளன – ஒரு மின்சார ஸ்கூட்டர், இரண்டு பசுக்கள், ஆடைகள் மற்றும் ஷாப்பிங் வவுசர்கள் ஆகியவற்றை பரிசாக வெல்லும் வாய்ப்பு உள்ளது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *