தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் ராசமிராசுதார் மருத்துவமனை மருத்துவத்துறையில் ஒப்பந்த முறையில் உதவி பேராசிரியர் நியமனம் செய்ய தினசரி நாள் இதழில் வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

மாறிவரும் கால சூழ்நிலையில் பல்வேறு புதிய, புதிய தொற்று நோய்கள் உருவாகி வருகின்றது. நோய்களின், நோயாளிகளின் தன்மை அறிந்து சிகிச்சை அளித்திடவும் மருத்துவ மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவத்தை பயிற்றுவிக்கவும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் பணி மிகவும் முக்கியமானது.

இந்த நிலையில் மருத்துவத் துறையில் நிரந்தரமாக பணி செய்ய வேண்டிய பேராசிரியர் இடங்களில் ஒப்பந்த முறை நியமனம் என்பது தேவையற்றது. முன்மாதிரியாக செயல்பட வேண்டிய மருத்துவத்துறை இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரந்தரமாக பூர்த்தி செய்யவும், அடிப்படை கால ஊதியத்துடன் பேராசிரியர்களை நியமனம் செய்யவும் வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும், சுகாதார துறை அமைச்சரையும் ஏஐடியுசி வலியுறுத்திறது என்று ஆர்.தில்லைவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.