கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் நாற்பது பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கல்லூரியின் முகப்பு வாயிலில் கருப்பு முகமூடி அணிந்து 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற தீர்ப்பின் படியும் அரசாணை 56 ன் படியும் அனைவரையும் படிப்படியாக நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்யும் வரை 12 மாதங்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட வருங்கால வைப்பு நிதி மற்றும் மேமாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது மேலும் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது