மதுரை மாநகராட்சி பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கிட மேயர் இந்திராணி ஏற்பாடு……

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒரு சில மாவட்டங்களில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் பொது மக்களுக்கு உடலின் நீர்ச்சத்து மற்றும் நீர் இழப்பினை சமநிலை செய்வதற்காக மாநகராட்சியின் சார்பாக 20 பொது இடங்கள், 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
45 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 100 வார்டு அலுவலகங்கள்,
5 மண்டல அலுவலகங்கள்,5 சித்தா ஆயுர் வேத மையங்கள், உள்ளிட்ட 206 இடங்களில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுவெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மதுரை மாநகராட்சி மீனாட்சியம்மன் திருக்கோவில் கீழ சித்திரை வீதியில் தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ்.
கரைசலை மேயர் வழங்கினார்.

தொடர்ந்து மதுரை மாநகரில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் தூய்மை பணிகள் குறித்து மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் வெயில் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மேயர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், நகர்நல அலுவலர் இந்திரா, உதவி ஆணையாளர் பிரபாகரன், உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், உதவி செயற் பொறியாளர் முத்து, சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், நகர உதவி திட்ட அலுவலர் ஸ்ரீகோதை, மண்டல மருத்துவ அலுவலர் ராம்மோகன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *