உலக மரபுச் சின்னங்கள் நாளை முன்னிட்டு, பூசாரிபட்டி – நரசிங்கம்பட்டி பொதுமக்கள் சார்பாக கிழவிக்குளம் மலையின் பாறை ஓவியங்கள் குகைத்தளம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் திருநகர் பக்கம், யானைமலை கிரின் பவுண்டேசன் தன்னார்வலர்கள், ஊர்மக்கள் என 60க்கும் மேற்பட்டோர் தன்னார்வமாக பங்கெடுத்தனர்.
கிழவிக்குளம்மலை பாறை ஓவியங்கள் குறித்து கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை பேரா. தேவி அறிவு செல்வம் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை தலைவர் ரவீந்திரன், விஸ்வா, தமிழ்தாசன் ஆகியோர் உரையாற்றினர். நரசிங்கம்பட்டி கிராமசபை கூட்டத்தில் பாறைபள்ளம் (கிழவிகுளம் மலை) பாறை ஓவியங்களை பாதுகாக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிழவிகுளம் மலை பாறை ஓவியங் களின் சிறப்பை எடுத்து கூறும் வகையில் அறிவிப்பு பலகை ஊர் சார்பாக வைக்கப்பட்டது. அந்த அறிவிப்பு பலகையை எல்.கே.டி நகர் அரசுபள்ளியின் தலைமையாசிரியர் தென்னவன், தோப்பூர் அரசு பள்ளியின் தலைமையாசிரியர் லிங்கேஸ்வயும் திறந்து வைத்தனர். பொறியாளர் அரிசிவசோழ
பாண்டியன் அறிவிப்பு பலகையை நன்கொடையாக வழங்கினார். பூசாரிபட்டி சோலைராஜா, மச்சக்காளை, வீரா, சூர்யா, பாண்டியராஜன், மயில்சோனை, மேலவளவு கோபால், விளாச்சேரி சதிஷ்குமார், ஒத்தக்கடை லட்சுமி, ஓவியர் நிலா பாண்டியன், சங்கர், ஜெயபாலகணேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.