பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி நிகழ்ச்சி……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி மற்றும் ராமகிருஷ்ண மடம் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான கல்வியை மேம்படுத்தும் புத்தாக்க பயிற்சி நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் மில்டன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஶ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் மற்றும் பேராசிரியர் முனைவர்.கிருஷ்ணவேனி ஆகியோர் கலந்து கொண்டு கல்வி சார்ந்த சொற்பொழிவு ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் முருகவேணி, ரூபிலா ,எழிலரசி இலக்கியா மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.