முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முதல் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 37 வயதுள்ள ஒரு நோயாளிக்கு அவரது மனைவியிடமிருந்து தானமாகப் பெற்ற சிறுநீரகத்தைக் கொண்டு 25-வது சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், காவிரி டெல்டா பிராந்தியத்தில் NABH – ன் அங்கீகாரம் பெற்றிருக்கும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதல் சிறுநீரக உறுப்புமாற்று அறுவைசிகிச்சை.
மீனாட்சி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் நிபுணர் மரு.எஸ். கௌரி சங்கர் கூறும் போது. இந்த அறுவை சிகிச்சையில் மனைவியின் சிறுநீரகம் மரபியல் ரீதியில் அவரது கணவருக்கு பொருத்தமானதாக இருந்தது. நெருக்கமான இரத்த உறவினர்கள் மத்தியில் மட்டும் காணப்படும்.
இந்த அசாதாரண பொருத்தத்தை கண்டறிந்த மருத்துவமனையின் நிபுணர்கள் குழு உயிருள்ள நபரிடமிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. சிறுநீரகத்தை தானமாக வழங்கிய மனைவியும் மற்றும் பொருத்தப்பட்ட சிறுநீரக உறுப்பு நிராகரிப்பிற்கான அறிகுறிகள் எதுவுமில்லாமல் அதனைப் பெற்றிருக்கும் கணவரும் நன்றாக குணமடைந்து வருகின்றனர் என்றார்.
அறுவை சிகிச்சை குழுவில் சிறுநீர் பாதையியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ரவிச்சந்திரன், இதய மார்பறை மற்றும் இரத்தநாள அறுவைசிகிச்சை துறையின் மூத்த நிபுணர் மரு. பி. சுரேஷ் பாபு, சிறுநீர் பாதையியல் துறையின் முதுநிலை மருத்துவர் மரு.வி. பிரவீன் மற்றும் மயக்கவியல் துறையின் முதுநிலை நிபுணர் மரு. ஜி.அரிமாணிக்கம் மற்றும் மயக்கவியல் துறையின் நிபுணர் மரு. எஸ்.நாராயணன் ஆகியோர் இருந்தனர்