பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே மேலவழுத்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு
ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய பால்குடம்,காவடி திருவிழா ….
மிக பெரிய ராட்சச ரத காவடி சுமந்தும்,திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் …..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலவழுத்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ சக்திவேல் முருகன் கோவில் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக பக்தர்கள் குடமுருட்டி ஆற்றங்கரை இருந்து மேள தாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் மிகப்பெரிய ராட்சச ரத காவடிகள் சுமந்தும், பால்குடம் எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து கோவிலை வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகர் உடனாய சக்திவேல் முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரத காவடி, பால்குடம் எடுத்து சக்திவேல் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் ஏற்பாடுகளை டிரஸ்டி மாவை. சுப்பிரமணியன் மற்றும் ஸ்ரீ சக்திவேல் முருகன் கோவில் நிர்வாகி மற்றும் உலக முருக பக்த சேவை அமைப்பு அறக்கட்டளை மாநிலத் தலைவர் வி.ஏ.துளசி மகாராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.