மயிலாடுதுறையில் பங்குனி உத்திர பெரு விழாவையொட்டி பழைமை வாய்ந்த வள்ளி, தேவசேனா உடனுறை 33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் பால்குட திருவிழா.திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு.
மயிலாடு துறை மாவட்டம் மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத 33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பங்குனி உத்திர பெருவிழாவை ஒட்டி காவிரி ஆற்றிங்கரையிலிருந்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் ஏந்தியும் வீதி உலா வந்தனர். மேளதாளம் முழங்க வந்த காவடிகள் பால்குடத்திற்கு வீடுகள் தோறும் பக்தர்கள் கற்பூர ஆராத்தி எடுத்து சுப்பிரமணியரை வழிபட்டனர்.இவ்விழாவில் திரளான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.