காஞ்சிபுரம் கோளிவாக்கம் பல்லவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி தாளாளர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் திருமதி சகிலா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.பள்ளி தாளாளர் முனைவர் வி.முத்து குத்து விளக்கு ஏற்றி நிகழ்வினை துவக்கி வைத்தார்.
பள்ளியில் படிக்கும் எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் பங்கேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர். மேலும் ஐந்தாம் வகுப்பு மாணவி பெண்ணுரிமை பற்றி சிறப்பாக பேசினார். இந்நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் இறுதிவரை இருந்து இந்நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர். கலை நிகழ்ச்சி பங்கேற்ற மாணவ மாணவிகள் சிறப்பான முறையில் சீருடை அணிந்து நடனமாடியது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. யோகா பயிற்சி செய்து காட்டியது பிரமிப்பாக இருந்தது. கலையின் வரலாற்றை யோகா ஆசிரியர் விளக்கி கூறினார்.
சிலம்பம், கராத்தே போன்ற அனைத்து துறைகளிலும் மாணவ மாணவிகள் பங்கேற்றது அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. ஒருநாள்கூட விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருகைத் தந்த மாணவ மாணவிகளுக்கு தாளாளர் வி.முத்து, முதல்வர் திருமதி சகீலா ஆகியோர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினர். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மூன்று மாணவ மாணவிகளுக்கும் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தா ஐடிஐ முதல்வர் ப.ஏழுமலை, புதுவைத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் கவிஞர் இர.ஆனந்தராசன், பூசிவாக்கம் செம்மொழி குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துச் சென்ற மாணவர்கள் அனைவருக்கும் மேடையில் சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் முடிவில் ஆசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.