தென்காசி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் பகுதியில்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மதியம் தொழுகை முடிந்ததும் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அந்த வகையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வல்லம் சாகுல் ஹமீது பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் திமுக தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அநீதியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் முகமது அப்பாஸ் மெளலவி, இஸ்மாயில் உலவி ஜாகிர் உசேன் பீர் முஹமது செல்லப்பா அப்துல் அஜிஸ் அன்வர் பாதுஷா காதர் சலீம் ஹபிபுல்லா திவான் ஒலி சையது வாத்தியார் பாபு மசூது அப்பாக்குட்டி திவான் ஒலி நயினார் காலித் கனி மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.