அரியலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, மத்திய அரசை கண்டித்தும், அமலாக்கத்துறை நடவடிக்கைகளை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பிரதமர் நேரு ஆரம்பித்த நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை சட்டத்துக்கு புறம்பாக அபகரிக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை ரத்து செய் எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத்தலைவர் ஆ.சங்கர் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் மு.சிவக்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.