திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ராமபவனத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆஞ்சநேய ஸ்வாமிக்கு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த ஆண்டு பழைய ஸ்ரீ ராமபவனத்தை இடித்து விட்டு புதிதாக ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடம் கட்டப்பட்டது.
அதற்கு நூதன மஹா சலார்ச்சா (ஸம்ப்ரோக்ஷணம்) பிரதிஷ்டாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் அனுக்கிரகத்தாலும், ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ ஜகத்குரு பதரீ சங்கராச்சாரியார் ஸ்வாமிகள், ஸ்ரீ வித்யாபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் ஆகியோரின் அருளாசியுடன் முதல் நாள் காலை 8-மணிக்கு கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் தொடங்கி, மதியம் 12- மணிக்கு பூர்ணாஹுதி நடைபெற்றது. மாலை 4-மணிக்கு யாகசாலை ப்ரவேசம், மாலை 6- மணிக்கு முதல் கால பூஜை ஆரம்பம, இரவு 8- மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை நடைப்பெற்றது. மறுநாள் காலை 6.45 -மணிக்கு 2-ஆம் கால பூஜை ஆரம்பம், காலை 9- மணிக்கு மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்று,
காலை 9.15- மணிக்கு கடம் புறப்பாடு,
காலை 9.30-10.30 க்குள் ப்ரதிஷ்டாபிஷேகம் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 6- மணிக்கு ஸ்வாமிகள் அலங்கரிக்கப்பட்ட ரத வாகனத்தில் ஒட்டகம், ஜேண்டை மேளக்கச்சேரி, வானவேடிக்கையுடன் வீதியுலா காட்சி நடைபெற்றது.
யாகசாலை பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளை ஸ்ர்வசாதகம் : “ஸ்ரீ வித்யா உபாஸந ரத்தினம் ” பிரம்மஸ்ரீ தஞ்சாவூர் ஜெ.சிவகுமார சாஸ்திரிகள் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். மங்கள இசை: ஞான கான கோகில நாதஸ்வர இசைவாணன், மெல்லிசை திலகம், வலங்கைமான் எஸ்.ஏ.எஸ். சந்திரசேகரன் குழவினர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேய தாஸன் வலங்கைமான் என்.ராமச்சந்திரன், பி.ஆர். சண்முகம், பப்பு சகோதரர்கள், ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி அறக்கட்டளை, ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருப்பணி குழுவினர் மற்றும் வலங்கைமான் நகர வாசிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.