தேசிய திறனாய்வு தேர்வு 2008 ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்தேர்வு நடைபெறும் இத்தேர்வின் நோக்கம் பள்ளியில் இடைநிற்றலை தடுக்கவும் ஏழை மாணவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது
தொடக்கத்தில் வருடத்திற்கு ரூ6,000 நான்கு வருடங்களுக்கு வழங்கப்பட்டது இப்பொழுது வருடத்திற்கு ரூ 12ஆயிரம் நான்கு ஆண்டுகளாக வழங்கப் பட்டு வருகிறது. இவ்வாண்டு மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி 105 மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மாநிலத்தில் முதலிடம் பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர்.
எட்டாம் வகுப்பில் இத்தேர்வு நடைபெறும் இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒன்பது 10, 11 மற்றும் 12 ஆகிய நான்கு வருடங்களுக்கு மொத்தம் ரூ. 48 ஆயிரம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது
2024 – 25 ம் ஆண்டு நடைபெற்ற என்.எம்.எம்.எஸ். தேர்வில் மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 140 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 105 மாணவர்கள் தேர்ச்சி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இதில் வசந்த் குமார் என்ற மாணவர் 157 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தையும் மதுரை மாவட்டத்தில் முதல் இடத்தையும் சந்தோஷ் குமார் என்ற மாணவன் 149 மதிப்பெண்கள் பெற்று மதுரை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர.
தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஸ்டீபன் லூர்து பிரகாசம், முயற்சியினாலும் ஆசிரியர்களின் உழைப்பினாலும் மாநிலத்தில் இரண்டாம் இடத்தையும் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற எண்ணிக்கையில்
105 மாணவர்கள் மாநிலத்தில் முதலிடத்தை பெற்று மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் . ஒளியால் உய்வுக்கு என்ற தாரக மந்திரத்தோடு செயல்படும் பள்ளி அடிமட்டத்தில் உள்ள மாணவர்களை சாதிக்கக்கூடிய மாணவர்களாக உருவாக்கி பெருமை படைத்திருக்கிறது.
பள்ளியின் அதிபர் தந்தை அருட்தந்தை ஹென்றி ஜெரோம், தாளாளர் அருட் சகோதரர் குழந்தை ராஜ், தலைமையாசிரியர் அருட்தந்தை ஸ்டீபன் லூர்து பிரகாசம், உதவி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மார்ட்டின் ஜார்ஜ் ஆகியோர்
இதற்கென்று உழைத்த ஆசிரிய, அலுவலக பெருமக்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றியையும், பாராட்டுதலையும்
மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
இப்பள்ளியில் அதிக (105பேர்) மாணவர் கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடத்தையும் மாவட்டத்தில் முதல் இடத்தையும் பெற்று மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.