தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் :-
தமிழ்நாடு முழுவதும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையினை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்,
வேளாண் துறை பணியில் நேரடியாக உள்வட்ட வருவாய் ஆய்வாளர்களை ஈடுபடுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5% ஆக குறைத்ததை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.