எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் புரட்சிகர சோசயலிஸ்ட் கட்சி (தமிழ்நாடு) மயிலாடுதுறை மாவட்ட முதல் மாநாடு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொது செயலாளர் ராஜா என்கிற ஆசீர்வாதம் பங்கேற்று பேசினார்.
இந்த மாநாட்டில், தமிழ்நாடு மாணவர்களின் அறிவு சார்ந்த மொழித்திறன் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மும்மொழி கொள்கை என்ற போர்வையில் இந்தியை எதிர்க்கும் தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பன்மொழி கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் கொண்டுவர வலியுறுத்துகிறோம்.மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் குறிப்பாக சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை டவுன் ஆகிய பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை துரித காலத்தில் தமிழக அரசு சீரமைத்து கொடுக்க வேண்டும்,