தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் பேரூந்து நிலையம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பேரூந்து நிலையம் அமைக்கப்படுமா என நன்னிலம் தொகுதி எம்எல்ஏ ஆர். காமராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் நேரு வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் பேரூந்து நிலையம் அமைக்க அரசுக்கு சொந்தமான இடம் இருக்கிறதென உறுப்பினர் தெரிவித்தால் உடனடியாக பேரூந்து நிலையம் அமைக்கப்படும். பேரூராட்சி பகுதிகளில் பேரூந்து நிலையம் அமைக்க சுமார் ரூ.5 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு இருந்தால் போதுமானது. அதற்கான நிதி அரசின் வசம் இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் நேரு தெரிவித்தார்.