திருநெல்வேலியின் அடையாளமான புகழ்பெற்ற நெல்லை இருட்டுக் கடை அல்வா ஆகும்.இந்த கடையில் உள்ள அல்வாவை சுவைக்காதவர்கள் எங்கும் இல்லை என்ற அளவுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஆகும் இந்த நிறுவனத்தை நடத்தி வந்த உரிமையாளர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அந்த நிறுவனத்தின் முழு பொறுப்பையும் அவரின் மகளான கவிதா சிங் என்பவர் நடத்தி வருகிறார்
சமீபத்தில் கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா என்பவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் மாப்பிள்ளை வீட்டார் தன்னை மிகவும் பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வா நிறுவனத்தை தனக்கு மாற்றி தர வேண்டும் என்றும் முழுவதும் மாப்பிள்ளை வீட்டார் நடத்த வேண்டும் என்ற நிலையில் தொந்தரவு செய்து வந்ததாகவும் மறுத்த புதுப் பெண்ணான ஸ்ரீ கனிஷ்கா மறுத்து வந்த நிலையில் தொடர்ந்து தொந்தரவு செய்வதாலும் கொலை மிரட்டல் விடுவதாகவும் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
திருமணமாகி 40 நாள்களிலேயே இருட்டுக் கடை உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கணவன் வீட்டினர் கொடுமைப்படுத்தும் நிலையில் தன்னுடைய தா யாருக்கு இந்த தகவலை தெரிவித்த நிலையில் இன்று தனது தாய் மற்றும் உறவினர்களுடன் காவல் நிலையம் சென்று ஸ்ரீ கனிஷ்கா போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிப்பதை தொடர்ந்து மிகுந்த வேதனைக்கு உட்பட்டு நானும் எனது குடும்பமும் உள்ளதாக ஸ்ரீ கனிஷ்கா தெரிவித்தார் மிகவும் பிரபலமான இந்த நிறுவனத்திற்கு இப்படி ஒரு சோதனையா என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.