திருச்சி ஒருங்கிணைந்த பஞ்சபூர் பேருந்து நிலையம் வரும் மே 9ஆம் தேதி திறப்பு – தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார் – நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பேட்டி

திருச்சியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 115.68 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுக்கும் என ரூ.900 கோடி மதிப்பீடு வழங்கப்பட்டது. அதில் அரசு முதல்கட்டமாக ரூ.460 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளை 349.98 கோடி மதிப்பில் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் கடந்த 2021 டிச.30ம் தேதி அடிக்கல் நாட்டினார்

கட்டுமான பணிகள் குறித்து இன்று தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் .தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்புதிய மார்க்கெட்டுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அதேபோல் தெர்மல் பகுதிக்கு அடிக்கல் நாட்டுகிறார் அதன் பிறகு புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து சுற்றி பார்த்து விழா மேடைக்கு தமிழக முதலமைச்சர் செல்கிறார், விழா மேடையில் 55 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார், மேலும் முன்னதாக வருகின்ற 8ம் தேதி தமிழக முதலமைச்சர் திருச்சி வருகை தந்து கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் அன்று இரவு திருச்சியில் தங்கி மறுநாள் 9ம் தேதி காலை நிகழ்ச்சியில் பங்கேர்கிறார் காலை 9:30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கி மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது என தெரிவித்தார்

மேலும் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய வசதிகள் குறித்த கேள்விக்கு அவர் கூறுகையில்..அதிகமாக செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே இந்த பேருந்து நிலையம் கட்டுமான பணியின் போது கழிவறை வசதிகள் செய்யப்படாமல் இருந்தது அதனை கவனத்தில் கொண்டு அதிக கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது ஆர்வோ வாட்டர் தயார் நிலையில் இருக்கிறது உணவகம் மற்றும் தேநீர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது, அதேபோன்று பிற பகுதிக்கு செல்லக்கூடிய வகையில் வாகன வசதிகள் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது, உய்யக்கொண்டான் வாழ்க்கையில் கழிவுநீர் கழிப்பதாக இருந்த குற்றச்சாட்டு தவறுஎனவும் சுத்தம் செய்யக்கூடிய கழிவுகள் தான் அங்கு ஊத்ப்படுகிறது எனவும் அது விவசாயத்துக்கு பயன்படும் என தெரிவித்தார்

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம் போர்க்களம் தான் இதனை மக்கள் முடிவு செய்வார்கள் மக்களை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் யார் வந்தாலும் திமுக எதிர்கொள்ளும் வேலை பொருத்தவரை நாங்கள் தொண்டராக இருந்து சொல்கிறோம் தலைவர் எந்த கட்டளையிட்டாலும் அதை நிறைவேற்றுவது எங்கள் வேலை என தெரிவித்தார்

இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் ,திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி ,மாநகராட்சி ஆணையர் சரவணன் ,திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

திருச்சி செய்தியாளர் அருள் மோகன்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *