கம்பம் அருகே அரசு கள்ளர் ஆரம்பப் புள்ளி நூற்றாண்டு விழா தேனி எம்பி பங்கேற்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்க முத்தன்பட்டி அரசு கள்ளர் ஆரம்ப பள்ளி துவங்கப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்ததையடுத்து நூற்றாண்டு விழா தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கருநாக்க முத்தன் பட்டி அரசு கள்ளர் பள்ளியின் ஆசிரியர் மு ஆனந்தி அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் த. குட்டிய ம்மாள் பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார் மதுரை கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் இணை இயக்குனர் க. முனுசாமி உத்தம பாளையம் சரகம் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் உதவி தொடக்க கல்வி அலுவலர் மு சாந்தி கம்பம் வட்டாரக் கல்வி அலுவலர் க. மகாலட்சுமி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரா. பாரதராணி கம்பம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் கி சுகாசினி ஆகியோர் இந்த விழாவிற்கு முன்னிலை வகித்தனர்
விழாவிற்கு தலைமை வகித்து தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பங்கேற்று பள்ளி மாணவ மாணவிகளின் விளையாட்டு விழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்
விழாவில் மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ. மொக்கப்பன் கல்வி புரவலர் மூ. ஜெயக் குமார் கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கே வனிதா மணி பாலார்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் த.முருகன் உள்பட பள்ளி இருபால் ஆசிரியர்கள் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் பள்ளியின் ஆசிரியர் ஜெ. ராஜன் நன்றி கூறினார்