செய்தியாளர் வெங்கடேசன்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை அருகில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மாவட்ட செயலாளர் ஆர் காந்தி அறிவுறுத்தலின்படி பனப்பாக்கம் பேரூர் கழக திமுக செயலாளர் என்ஆர், சீனிவாசன் தலைமையில் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்விற்கு பணப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன் முன்னிலை வகித்தார் இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக நெமிலி கிழக்கு ஒன்றிய பெருந்தலைவர் பெ .வடிவேலு பங்கேற்று நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார் ஒன்றிய நகர,பேரூர், கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளானோர் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர் .