திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டுச் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் சங்க தலைவர் முனைவர் க. சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக சங்க புரவலரும், தமிழ்நாடு மாநில நீச்சல் கழக தலைவருமான முனைவர். சேதுதிருமாறன் மற்றும் வணிக வரித்துறை GST அலுவலர் திரு பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். செயலாளர் முனைவர் பெரியதுரை அனைவரையும் வரவேற்றார்.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கடந்த ஆண்டு அனைத்து விளையாட்டுகளிலும் தேசிய அளவில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை மே மாதம் முதல் வாரத்தில் அழைத்து விழா நடத்தி பாராட்டி ஊக்கப்படுத்துவது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில், விழுப்புரத்தில் 21.07.2024 அன்று தமிழ்நாடு முழுவதுமிருந்து 998 வீரர்கள் இணைந்து 100 மால்கம்களில் 15 நிமிடம் தொடர்ச்சியாக சாகசங்கள் செய்து உலக சாதனை படைத்தவர்களில் திருநெல்வேலி மாவட்டத்தைச்சார்ந்த 10 வீரர்களும் அவர்களது பயிற்ச்சியாளர் திரு சங்கரானந்தன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
நிகழ்ச்சியில் குத்துச்சண்டை கழக செயலாளர் திரு ஷிவ்குமார் பால்; பூப்பந்து கழகமாநில இணை செயலாளர் திரு வெள்ளப்பாண்டியன்; டேக்வாண்டோ கழக செயலாளர் திரு ரவீந்திரன்; அட்யாபட்யா கழக செயலாளர் திரு இசக்கி, ஜூடோ கழக தலைவர் திரு சரவணன், செயலாளர் திரு ஜெகமோகன்; ஸ்பெஷல் பாரத் ஒலிம்பிக்ஸ் தலைவர் திரு கலிலுல்லா, செயலாளர் திருமதி கண்ணகி ஹஸீனா, இயக்குனர் திரு இளையராஜா , வாள்விளையாட்டு சங்க பொறுப்பாளர் நிகின் ஹயான், சைக்ளிங் சங்க செயலாளர் திருமதி ஹில்டா பொன்மணி, பிசியோதெரபிஸ்ட் திரு ராஜகோபால், எறிபந்து செயலாளர் திரு இசக்கிமுத்து, கயிறு இழுக்கும் சங்க துணைத்தலைவர் திரு முத்துசாமி, செயலாளர் திரு ஆறுமுக நயினார், மால்கம் செயலாளர் திரு சங்கரானந்தன், ரோல்பால் செயலாளர் திரு அழகேசராஜா, கோ கோ செயலாளர் திரு ரமேஷ் உடற்கல்வி இயக்குநர் திரு சைலப்பன் மற்றும் மால்கம் வீரர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.