திருப்பாதிரிப்புலியூர் கிராமத்தில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்க பூஜை.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் திருப்பாதிரிப்புலியூர் கிராமம் 107 ஆத்தூர் ஊராட்சியில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்க
பூஜை விழா தொடங்கப்பட்டது.
திருப்பாதிரிப்புலியூர் கிராமத்தில் வடகிழக்கு நீலகண்டபுரம், தென்கிழக்கு ஆற்றூர், தென்மேற்கு நெமிலி, வடமேற்கு திருநீர்கண்டபுரம், இதன் மத்தியில் திருப்பாதிரிப்புலியூர் இப்பெயர்கள் மருவி ஆத்தூர் என அழைக்கப்படுகிறது.
இக்கிராமத்தில் மிகப் பெரிய கோட்டை மிகப்பெரியகோயில் இன்று அருள்மிகு சுழம்பு ஆதிகுன்று பெரியாண்டவர் திருகோயிலாக அய்யா எழுந்தருளி ஆதிகாலம் தொட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.
வரலாற்று சிறப்புமிக்க திருப்பாதிரிப்புலியூரில் தெய்வமே தமிழ் தமிழே தெய்வம் உலகின் முதல் மொழி உலகின் முதல் குடி உலக மக்களின் தாய்மடி நம் தாய்மொழி தமிழ் மொழிக்கு தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்க திருவருள் கூட்டி உள்ளது. இத்திருக்கோயில் திருப்பணிக்கு உலக தமிழ் மக்களாகிய நாம் தமிழ் அன்னைக்கு மேலே குறிப்பிட்ட திருப்பாதிரிப்புலியூர் கிராமத்தில் நம் தமிழ் அன்னைக்கு மிகப் பெரிய திருக்கோயில் அமைக்க அருள்மிகு சுழம்பு ஆதி குன்று பெரியாண்டவர் திருக்கோயில், கிராமதேவதை பினி தீர்க்கும் பொன்னியம்மன் திருக்கோயில் திருப்பணி நடைபெற உள்ள நிலையில் பூஜை விழா தொடங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வருகின்ற தமிழ் தேதி சித்திரை திங்கள் 29-01-45,556 ஆங்கில தேதி 12-05-2025 திங்கள்கிழமை அன்று காலை 9-30 மணிக்குமேல் 10-30 மணிக்குள் திருக்கோயில் திருப்பணி தொடக்க விழா பூமி பூசை நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முன்னேற்ற கழகம் நிருவன தலைவர் திருப்பாதிரிப்புலியூர்
சின்னகவி சிராமசெயம் வெற்றிவேல் தமிழர் ஆன்மீக மக்கள்தொகை தொண்டு இயக்க தலைவர் வேல்பாண்டியன் சிறுதாமூர் அடிகள் பா.ரவி அவிரொளி சிவம் பா.தமிழ்செல்வன் உட்பட கிராம பொது மக்கள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.