கோவையில் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கென இலவச நீட் பயிற்சி மையம்,ராவ் சாகிப் எல்.குருசாமி கல்வி மையம் சார்பாக நடைபெற்று வருகின்றது..இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பி.எஸ்.கிருஷ்ணன் நினைவு இலவச நீட் பயிற்சி முகாம் துவக்க விழா மகளிர் பாலிடெக்னிக் அருகில் உள்ள புத்தா ஐ.ஏ.எஸ்.பயிலகத்தில் நடைபெற்றது.
மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்துரு தலைமையில் நடைபெற்ற விழாவில் வழக்கறிஞர் நவீன் குமார்,அம்பேத்கர் இரவு நேர பாடசாலை ஒருங்கிணைப்பாளர் சந்திர சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரபி மற்றும் தமிழ்நாடு எஸ்.சி.எஸ்.டி.ஆணைய உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரபி பேசுகையில்,கல்வியால் மட்டுமே வாழ்வில் முன்னேற்றத்தை தந்து அடுத்தபடிக்கு கொண்டு செல்ல முடியும் என தெரிவித்த அவர்,சமூகத்தில் பின் தங்கிய மக்கள் கல்வி பயின்றால் மட்டுமே சமுதாய மாற்றத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்..
எனவே இது போன்ற இலவச பயிற்சி மையங்களை நடத்தி வருபவர்களை தாம் மனமார பாராட்டு தெரிவிப்பதாக அவர் கூறினார்..நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்