பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
வலங்கைமானில் சிட்டோ ஸ்கூல் ஆஃப் இந்தியா கராத்தே பயிற்சி பள்ளியின் பட்டய தகுதி தேர்வு…..
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள கோவிந்தராஜ் காம்ப்ளக்ஸ் மேல் மாடியில் சிட்டோ ஸ்கூல் ஆஃப் இந்தியா கராத்தே பயிற்சி பள்ளியில் பட்டயத் தேர்வு நிகழ்ச்சி தலைமை பயிற்சியாளர் ரென்சி சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு சாகச பயிற்சிகளை செய்து காட்டி தகுதி பெற்றனர். தகுதி பெற்ற மாணவர்களுக்கு சிட்டோ ஸ்கூல் ஆஃப் இந்தியா கராத்தே பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் ரென்சி சுரேஷ் பட்டயம் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் சென்சாய் பிரவீன் குமார், அவினாஷ் மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.