எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் மழலையர் பள்ளி ஆண்டு விழா. பனை மரத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து மழலையர்கள் விளக்கம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குட் சமாரிட்டன் மழலையர் நர்சரி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது.
இதில் தமிழக மாநில மரமான பனை மரத்தினால் கிடைக்கும் நன்மைகள் அதில் கிடைக்கும் பொருட்களான நுங்கு, பனைமட்டை, பனைவெல்லம், பனை கல்கண்டு, மற்றும் பல்வேறு பலன் தரும் பொருட்கள் நன்மைகள் குறித்து மழலையர்கள் தங்களது மழலை குரலில் ஒவ்வொன்றாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதே போல் பீட்சா, பர்கர், சிப்ஸ் ஆகிய துரித உணவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், காய்கறி, கீரைகள், முட்டை, பழங்கள் ஆகிய சத்தான உணவினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் குழந்தைகள் அந்தந்த உணவில் வடிவங்களை அணிந்தவாறு நடனத்துடன் விளக்கியது பெற்றோர்களிடம் வரவேற்பையும். பாராட்டையும் .பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்து கரகோஷம் எழுப்பினர்