வெற்றி பெற்ற வீரர்களுக்கு அ.ம.மு.க. மாநில இணை செயலாளர் லாவன்யா பரிசு வழங்கி,பாராட்டு
புதுச்சேரி உழவர் கரை பெத்தாங் கிளப் (OPC)நடத்திய இரண்டாம் ஆண்டு பரிசளிப்பு விழா உழவர் கரை பில்லா பாங் பள்ளியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேற்கு மாநில இணை செயலாளர் சமூக சேவகி , சரண் அறக்கட்டளை நிறுவனர், மதர் தெரேசா பவுண்டேஷன் சேர்மன்,முனைவர் லாவண்யா, கலந்துகொண்டு மதியம் ஆட்டத்தை துவங்கி வைத்தார்.மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கினார். முதல் பரிசாக 20 ஆயிரம் மதிப்புள்ள கோப்பையும், ஜந்தாம் பரிசாக கோப்பை வழங்கினார். மற்றும் வீரர்களுக்கு பதினாறு பேருக்கு தலா ரு. 1000 ருபாய் வீதம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கிழக்கு மாநில அம்மா பேரவை செயலாளர் பிரகாஷ். மேற்கு மாநில வர்த்தக பிரிவு செயலாளர் தனவேல் உழவர் கரை தொகுதி மேலவை பிரதிநிதி லூர்துசாமி மற்றும் பிச்சவீரான் பேட்டை சார்ந்த முருகன் ஐயப்பன் செல்வமணி அன்பழகன் குமார் வேலு மற்றும் முத்துபிள்ளை பாளையம் பிரசாந்த் ராஜி சிவபாலன் அருள்பாண்டி ஜெயபால் யுவராஜ் ஐயப்பன் தக்க குட்டை சரளா அமலா சந்திரா உமா மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இன்நிகழ்சியை உழவர் கரை பெத்தாங் கிளப் நிர்வாகி லப்பு ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.