கோயம்புத்தூர்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை எடுத்துரைக்கும் நாளாக இந்த நாள் உலக சுகாதார அமைப்பினால் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளை முன்னிட்டு, கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜிஸ். மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையம் சார்பில் மக்களிடையே மாஸ்டர் செக்கப் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏ.ஜிஸ். மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையத்தின் இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவர் டாக்டர் ஆதித்யன் குகன் கூறியதாவது :-
வருடாந்திர முழு உடல் பரிசோதனை செய்ய மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் தயக்கமும் உள்ளது. ஏனென்றால் அவர்கள் அவ்வாறு உடல் பரிசோதனை செய்து கொண்டால் நமக்கு நோய் உள்ளது என்று சொல்லிவிடுவார்களோ எனவும் நம்மிடம் நோய் இருக்கிறது எனவும் என்பதால் அதற்கான சிகிச்சை செலவு அதிகமாகும் என்று பயப்படுத்திவிடுவார்கள் என்பது போன்ற தேவையற்ற அச்சம் மக்களிடையே இன்று உள்ளது.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,” என்ற பெரியவர்கள் சொல்வார்கள். உலகில் நாம் எங்கிருந்தாலும், எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும், ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவோம். அப்படி ஒரு வாழ்க்கையை நாம் ஆயுசு முழுவதும் வாழ வேண்டும் என்றால் நாம் அனைவரும் நமக்கு உடல் நல குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை முன்கூட்டியே கண்டறிந்து கொள்ள வேண்டியது அவசியம். நோய் வந்த பின்னர் சிகிச்சை எடுப்பதை விட உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அவ்வாறு இருந்தால் அதை ஆரம்பக் நிலையிலேயே கண்டறிவதும் மிக மிக அவசியம்.
இன்று பலரிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறை பழக்கம் இருப்பது இல்லை. துரித உணவுகள் உண்பது, குறைந்த உடல் உழைப்பு, குறைந்த நேரமே தூங்குதல் இது போன்ற செயல்களால் 30 முதல் 45 வயதுக்கு உள்ளவர்களுக்கே இப்போதெல்லாம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
சமீப காலத்தில் கூட இளைஞர்கள், சிறுவயதினர் இதய நோயாளும் பக்கவாதத்தாலும் அதிக அளவில் பாதிக்கப்படுவதை நாம் செய்திகளில் படுத்திருப்போம்.
இது போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை நாம் கண்டறியவும், பாதிப்புகளை தவிர்க்கவும் வருடாந்திர உடல் நலப் பரிசோதனை செய்வது அவசியம். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை.
இதை கருத்தில் கொண்டு இதற்கான பிரத்தியேக மாஸ்டர் ஹெல்த் செக்கப் தொகுப்புகளை ஏ.ஜிஸ். மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையத்தில் நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இந்தப் பரிசோதனைகளை வெறும் அரை நாளிலேயே செய்து கொள்ள முடியும். வெறும் 4 மணி நேரத்தில் இந்த பரிசோதனைகளை முடித்துவிட்டு மக்கள் வீட்டிற்கு திரும்ப செல்லும் வகையில் இந்த பரிசோதனைகள் தொகுக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே மாஸ்டர் ஹெல்த் செக்கப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களிடம் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வலியுறுத்தவும்
ஏ.ஜிஸ். மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையம் சார்பில் ஏப்ரல் 7 முதல் 12 ஆம் தேதி வரை, ரூ. 3500 மதிப்புள்ள உடல்நல பரிசோதனைத் தொகுப்புகளை இலவசமாக இந்த உலக சுகாதார தினத்தன்று அறிமுகம் செய்கிறோம்.
இதில் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் , சிறுநீரக செயல்பாடுகள் ஆகியவற்றை அறிய ரத்தப் பரிசோதனையும், முழு ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளும், இசிஜி, எக்கோ மற்றும் மருத்துவர் உடன் கலந்தாலோசனைகள் ஆகியவை அடங்கும். மேலும் சிறுநீரகவியல், சருமவியல், மகளிர் நல மருத்துவம் குறித்த கலந்தாலோசனைகளும் உண்டு.
ஏப்ரல் 7ம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் இந்த சேவைகளை பெற வரும் மக்களுக்கு கூடுதலாக தேவைப்படும் ஆய்வக பரிசோதனைகளில் 20 % தள்ளுபடியும் அனைத்து மருந்துகளின் மேல் 15 % தள்ளுபடியும் வழங்கப்படும்.
நாளொன்றுக்கு முதல் 50 பேருக்கு இந்த சிறப்பு வாய்ப்பு வழங்கப்படும். முதலில் வருவோருக்கே முன்னுரிமையும் வழங்கப்படும். இந்த சிறப்பு திட்டத்தின் பயன்களைப் பெற பதிவு செய்தல் கட்டாயம்.
முன்பதிவு செய்ய இந்த எண்களை அழைக்கவும் – 9659455556; 9944333006; 8489655556.