இது குறித்து . மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
ஒன்றிய பா ஜ க அரசு கொண்டு வந்துள்ள வக்ப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தி மு க – அ தி மு க காங்கிரஸ் – விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற இடது சாரி கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அனைவருக்கும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டை சேர்ந்த பாராளு மன்ற உறுப்பினர்கள் ஒரணியில் திரண்டு ஒட்டு மொத்தமாக எதிர்த்து வந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ கே வாசன் மட்டுமே ஆதரவு அளித்தது இஸ்லாமிய மக்களிடையே வருத்ததை உண்டாக்கியது. இது போன்று இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராகவும் மதவாத கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளை இஸ்லாமியர்கள் புறகனிக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக முத்தலாக் – வக்பு திருத்த சட்டம் போன்ற சட்டங்களை கொண்டு வந்து இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிப்பதோடும் மட்டும் இல்லாமல் பெரும் நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி வரும் ஒன்றிய பா ஜ க அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
எனவே : இந்தியா முழுவது வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக ஒன்றிய பா ஜ க அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.