புதுச்சேரி உழவர் கரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்து மாரியம்மன் தேவஸ்தான திருப்பணி தொடக்க கால்கோல் விழாவில் புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக இணை செயலாளர் சமூக சேவகி முனைவர் லாவண்யா கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தார்
புதுச்சேரி உழவர் கரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்துமாரியம்மன் தேவஸ்தானம் திருப்பணி தொடக்க விழா மற்றும் கால்கோல் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவை ஒட்டி காலை சாமிக்கு விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம் மற்றும் மகா சுதர்சன ஹோமம் லட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற கால்கோள் விழாவில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில இணை செயலாளர், சமூக சேவகி முனைவர் லாவண்யா கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்தார்.
மேலும் சமூக சேவகி முனைவர் லாவண்யாவிற்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பு பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள் திருப்பணி குழு தலைவர் தமிழ்வேந்தன் சிவாச்சாரியார் அமிர்த கணேசன் ஆலய நிர்வாகி துரைராஜன் மற்றும் ஊர் பெரியோர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.