தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் மத்திய மாவட்ட மாநகர கழகம் மருத்துவ கல்லூரி பகுதி சார்பாக மருத்துவ கல்லூரி பகுதி கழக செயலாளர் டி.மனோகரன் ஏற்பாட்டின் பேரில் மத்திய மாவட்ட கழக செயலாளர் மா.சேகர், மாநகர செயலாளர் என்.எஸ்.சரவணன் ஆகியோர் முன்னிலையில், கழக அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் கோடை கால தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
மேலும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திருஞானம், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் துரை.வீரணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர் குளிர்பானங்கள் வழங்கினார்கள் பொதுமக்கள் கடும் வெயிலிலும் ஆர்வமாக வந்து வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் கரந்தை பஞ்சு, புண்ணியமூர்த்தி, சதீஷ்குமார். தஞ்சை மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ், அவைத் தலைவர் நாகராஜன், மத்திய மாவட்ட பொருளாளர்.அன்புச்செல்வன், மகளிர் அணி சித்ரா அங்கப்பன், கவிதா கலியமூர்த்தி, உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தினர், வட்டக் கழக செயலாளர்கள், தொண்டர்கள் என பலர்கலந்து கொண்டனர்.