திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்று முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் தே.ரங்கநாதன், வட்டார மேற்பார்வையாளர் ஆறுமுகம், ஆசிரியர் பயிற்றுனர் சுப.தமிழ் நேசன் ஆகியோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள், ஆசிரியை அகிலாண்டம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களின் தனித் திறனை மேம்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியருக்கு பெற்றோர்கள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

Share this to your Friends