தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடி கம்பங்கள் சமூகம் மதம் சங்கம் சம்பந்தமான கொடி கம்பங்களை 20/05/25-க்குள் தாங்களாகவே அகற்றுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவ்வாறு தவறும் பட்சத்தில் அரசு முன்வந்து கொடி கம்பங்களை அகற்றும் எனவும், அதற்கான தொகையினை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.